பிரித்தானியாவின் மிகப் பெரிய கல்விக்கூடத்தில் அமுலாகும் தடை
பிரித்தானியாவின் மிகப் பெரிய கல்விக்கூடங்களில் ஒன்றான ஆர்மிஸ்டனின் நிர்வாகம் பாடசாலை நேரங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 42 அரச பாடசாலைகளில் சுமார் 35,000 மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று ஆர்மிஸ்டன் அகாடமி தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மாணவர்களின் கற்றல் மற்றும் நல்வாழ்வை சீர்குலைப்பதாகவும், அவர்களின் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் Ormiston இன் தலைமை நிர்வாகி டாம் ரீஸ் கார்டியனிடம் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், முந்தைய பழமைவாத அரசாங்கத்தின் கீழ், இங்கிலாந்தின் கல்வித் துறை, நாட்டின் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை புதுப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.