ஐரோப்பா

பாரீஸில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்… இரு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பொலிஸ் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக இரு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பாரீஸை அமைதியாக வைத்துக்கொள்ள பொலிஸார் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகிலுள்ள, La Courneuve என்னுமிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் ஒன்றை சூழ்ந்துகொண்ட சிலர், பட்டாசுகளைக் கொண்டு பொலிஸ் நிலையம் மீது சரமாரியாகத் தாக்குதல் நிகழ்த்தினார்கள். இந்த தாக்குதல், சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

2 escape from police station lock-up, nabbed : The Tribune India

கடந்த புதன்கிழமை, இருசக்கர வாகனத்தில் வந்த Wanys R (18) என்னும் இளைஞரை பொலிஸார் நிற்குமாறு கூற, அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தாமல் அங்கிருந்து விரைந்துள்ளார்.பொலிசார் அவரைத் துரத்த, பொலிஸ் வாகனம் மோதியதில் Wanys உயிரிழந்தார், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் காயமடைந்தார்.

உயிரிழந்த Wanys, La Courneuve என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆக, அவர் உயிரிழந்தது தொடர்பில்தான் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!