பிரித்தானியாவில் ஓட்டுநர் தேர்வில் களமிறக்கப்படும் இராணுவம்!
பிரித்தானியாவில் ஓட்டுநர் தேர்வு நிலுவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதற்கமைய பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த 36 இராணுவ ஓட்டுநர் தேர்வாளர்கள் இந்த விடயத்தில் உதவி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஓட்டுநர் தேர்வுகளை விரைந்து நடத்தி முடிக்க முடியும் எனவும் அதிக தேவை உள்ள இடங்களில் அடுத்த ஆண்டு மேலும் 6,500 சோதனைகள் கிடைக்கும் என்று போக்குவரத்துத் துறை (DfT) தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையின் சிவிலியன் பணியாளர்களைக் கொண்ட 36 பாதுகாப்பு ஓட்டுநர் தேர்வாளர்கள் (DDEs), வாரத்தில் ஒரு நாள் 12 மாதங்களுக்கு ஓட்டுநர் சோதனைகளை நடத்த உதவுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினால் மூன்றாம் தரப்பினர் மோட்டார் தேர்வுகளை அதிகவிலைக்கு மறுவிற்பனை செய்வதை குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





