மெஸ்ஸி இந்திய பயணம் குறித்து உண்மையை உடைத்த அர்ஜென்டினா கால்பந்து சங்கம்.!

உலக புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவானும், அர்ஷென்டினா வீரருமான லியோனல் மெஸ்ஸி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியா வருகை அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக கேரளாவில் விளையாடவுள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வான இந்த பயணத்தின் போது, உலகக் கோப்பை சாம்பியன்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் ஒரு கண்காட்சிப் போட்டியை விளையாடுவார்கள். இது கேரள அரசாங்கத்தால் ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெஸ்ஸியின் வருகை குறித்து பல மாதங்களாக ஊகங்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு இறுதியாக AFA-வின் அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், இந்த தகவலை கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் வி. அப்துரஹிமான் உறுதிப்படுத்தியுள்ளார்.