இன்று ஆரம்பமாகும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா!

இன்றைய தினம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா ஆரம்பமாகிறது
நாளை காலை நடைபெறவுள்ள திருநாள் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறும் என யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்
வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர்.
இன்று மாலை 4 மணியளவில் திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை என்பன நடைபெறவுள்ளன.
இதனையடுத்து புனித அந்தோனியாருடைய திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு திருநாள் திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பில் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.