இலங்கை பொதுத் தேர்தலுக்கான அதிகபட்ச செலவு வரம்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வேட்பாளர்கள், கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவு வரம்புகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பாளர்கள், கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவு வரம்புகள் மாவட்டங்களைப் பொறுத்து மாறுபடும்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில்
வேட்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவு வரம்பு ரூ. 5,750,000 கட்சிகளுக்கு ரூ. 79,493,756 மற்றும் தேசிய பட்டியல் வேட்பாளர்களுக்கு ரூ. 34,694.
மேலும், வன்னி மாவட்டத்தில் வேட்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவு வரம்பு (குறைந்தது) ரூ. 1,673,243, கட்சிகளுக்கு ரூ. 9,91,3,964 மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு ரூ. 4,327.
இது தொடர்பான முழுமையான தகவல் பின்வருமாறு,