2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
2025ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) அறிவித்தார்.
அதே வேளையில் மாகாண சபைத் தேர்தலும் இந்த வருடத்தின் பிற்பகுதியில் நடைபெறும்.
கண்டிக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திஸாநாயக்க தனது விஜயத்தின் ஒரு பகுதியாக, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
மல்வத்து மகா விகாரையில் வைத்து வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த அவர், தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் அண்மையில் இந்திய விஜயம் செய்தமை தொடர்பில் கலந்துரையாடினார். துறவிகள் செட்பிரித் ஓதி ஆசி வழங்கினர்.
பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஆசீ பெற்றார்.