கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வரும் வரை.சுமார் 3 மாத காலப்பகுதிக்குள் மாணவர்கள் அந்தந்த பாடசாலைகளிலேயே தொழிற்பயிற்சி நெறியைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உயர்தரப் படிப்பைத் தொடராவிட்டாலும், இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கான சில திறன்களையும் அறிவையும் பெற முடியும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்
(Visited 15 times, 1 visits today)