68வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சாகசப்பிரியர்..!
68வது மாடியில் இருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவர் உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர் சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது கதவைத் தட்டி அங்கிருந்த பணிப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணோ அச்சத்தில் உதவ மறுத்து காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டார்.அதற்குள் ரெமி லுசிடி கால் தவறி கீழே விழுந்து மரணம் அடைந்ததாக தெரிகிறது.
(Visited 12 times, 1 visits today)





