இலங்கை

அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளே நாடு இந்த நிலைமைக்கு செல்வதற்கான காரணம் : வியாழேந்திரன்

காலம்காலமாக இந்த நாட்டினை ஆட்சிசெய்த அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளே இன்று இந்த நாடு இந்த நிலைமைக்கு செல்வதற்கான காரணம் என வர்த்தக,கூட்டுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கலும் தேசியத்தில் சாதணை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு மற்றும் கூட்டுறவாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன்போது ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயற்படும் வைத்தியசாலை மற்றும் பெற்றோல் நிரப்பு நிலையம்,சுப்பர்மார்க்கட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் ஊழியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஏறாவூர் பாடசாலையில் கல்வி கற்று தொழில்நுட்ப துறையில் தேசிய சாதனை படைத்த மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளிலும் உதவியவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தினை வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்ற தலைவரும் கௌரவிக்கப்பட்டார்.

இதேபோன்று நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டவர்களும் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் வைத்தியசாலையின் கேட்போர் கூட்டத்தில் ஏறாவூர் கூட்டுறவுச்சங்க தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக,கூட்டுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்