இலங்கையர்களை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக கூறி பெண் செய்த செயல்
30 வயதான பெண் ஒருவர் களுபோவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருமேனியாவில் தொழில் பெற்று தருவதாக கூறி ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவர் கைதானார்.
கைதானவர் அனுமதிபத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகத்தை நடத்தி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்புவதற்காக ஆள் ஒருவரிடம் 4 இலட்சத்து 40 ஆயிரம் பணத்தை பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.





