இலங்கை

13 ஆவது திருத்தச் சட்டத்தை புறக்கணிக்க முடியாது : நாடாளுமன்றில் ரணில் கருத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தம் நாட்டின் அதியுயர் சட்டம் என்பதால் அதனை புறக்கணிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகார சபையும் சட்டவாக்க சபையும் அதனை நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதை அடைவதற்கு, பரந்த மற்றும் திறந்த மனதுடன் விவாதங்கள் மூலம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்கி மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி தயாராகி வருவதாகவும்  மாகாண சபைகள் இயங்கும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  பாராளுமன்றத்திற்கு முன்பாக உண்மையாகவும் பொறுப்புடனும் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் புதிய திசையை நோக்கி எடுக்கப்படும் கூட்டு முயற்சிகளிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட விவாதங்களை தவிர்த்து நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

நாட்டின் நீண்டகால நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் தீர்மானங்களை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேர்மையான ஒற்றுமை தேவை எனவும்,  தேசிய காணி ஆணைக்குழு மற்றும் தேசிய காணி கொள்கையை விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய காணி ஆணைக்குழுவின் பணிகளுக்கு வழிகாட்டும் வகையில் செப்டம்பர் மாதத்திற்குள் காணி ஆணைக்குழு கொள்கை சட்டம் கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகம் காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், மூன்று மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் தரவு உள்ளீட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்