உலகம் செய்தி

தவறுதலாக நாடு கடத்தப்பட்டவர் மீண்டும் சிறைப்பிடிப்பு: உடனடியாக விடுவிக்க நீதிபதி உத்தரவு

அமெரிக்காவில் இருந்து தவறுதலாக நாடு கடத்தப்பட்டு, பின்னர் மீண்டும் அழைத்து வரப்பட்ட கில்மர் அப்ரேகோ கார்சியா என்பவரை, குடிவரவுத் தடுப்பிலிருந்து (Immigration Custody) உடனடியாக விடுவிக்க மேரிலாந்து ஃபெடரல் நீதிபதி பவுலா சின்னிஸ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் எல் சால்வடார் சிறைக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட இவர், மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்ட பின் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

நீதிபதி சின்னிஸ் தனது உத்தரவில், அப்ரேகோவை மீண்டும் தடுத்து வைத்தது சட்டப்பூர்வ அதிகாரம் இன்றிச் செய்யப்பட்டது என்று கண்டித்ததுடன், இவரை நாடு கடத்துவதற்கான சரியான உத்தரவு அரசாங்கத்திடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கார்சியா இப்போது டென்னசி நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டதன் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!