தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அடுத்த வருடம் முதல் அனுமதி

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால் வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் மூன்றாவது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.
(Visited 37 times, 1 visits today)