ஆசியா

இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவை காலவரையின்றி நீட்டித்துள்ள தாய்லாந்து

தாய்லாந்து அரசாங்கம், இந்தியச் சுற்றுப்பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்கும் நடைமுறையை காலவரையறையின்றி நீட்டித்துள்ளது.தாய்லாந்தின் சுற்றுப்பயண ஆணையம் இத்தகவலை உறுதிப்படுத்தியது.

இந்தியச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாள்கள் வரை தங்க இயலும். விரும்பினால் உள்ளூர்க் குடிநுழைவு அலுவலகத்தின் அனுமதியுடன் மேலும் 30 நாள்களுக்கு அவர்கள் தங்கவும் வாய்ப்புண்டு.

இந்தியப் பயணிகள் விசாவிற்கு விண்ணப்பிக்காமலே தாய்லாந்து செல்லும் சலுகையை இத்திட்டம் வழங்குகிறது.

கடந்த ஆண்டு (2023) நவம்பர் 10ஆம் திகதி இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மே 10ஆம் திகதியுடன் அது முடிவடையும் என்று முன்னர் கூறப்பட்டது. பின்னர், தாய்லாந்து அரசாங்கம் நவம்பர் 11ஆம் திகதி வரை அதை நீட்டித்தது. தற்போது காலவரையறையின்றி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சுற்றுப்பயணிகளின் விருப்பப் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடுகளில் தாய்லாந்தும் அடங்கும்.இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1.64 மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்திற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.

தாய்லாந்திற்கு அதிகம் செல்லும் அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் பட்டியலில் மலேசியா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்