உலகம் செய்தி

இன்று முதல் போர் நிறுத்தம்: தாய்லாந்து, கம்போடியா இணக்கம்!

தாய்லாந்தும் Thailand, கம்போடியாவும் Cambodiaமீண்டும் போர் நிறுத்தத்துக்கு (ceasefire)
இணங்கியுள்ளன. இதன்மூலம் பல வாரங்களாக நீடித்த போர் இன்று (27) மதியத்துடன் நிறைவுக்கு வருகின்றது.

இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

20 நாட்களாக நீடித்த போரில் இரு தரப்பிரும் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையில் நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகின்றது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஜூலை 24 ஆம் திகதி போர் வெடித்தது. அமெரிக்கா மற்றும் மலேசியாவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.

எனினும், டிசம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி தாக்குதல்கள் இடம்பெற்றன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!