அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற டெக்சாஸ் நபர் கைது

கடந்த வாரம் அமெரிக்காவின் டல்லாஸில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவரை கொலை செய்த குற்றவாளியை சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
23 வயதான ரிச்சர்ட் ஃப்ளோரஸ் என்று அடையாளம் காணப்பட்ட இளைஞர், அக்டோபர் 4ம் திகதி எரிபொருள் நிலையத்தில் பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்த 28 வயது சந்திரசேகர் போலே மீது தாக்குதல் நடத்தி தப்பி சென்றார்.
குறித்த நபர் கொலை செய்துவிட்டு மற்றொரு வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீவிர தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் அவரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
மேலும், விசாரணை நடந்து வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் படிப்பை ஹைதராபாத்தில் முடித்த போலே 2023ல் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.