8.5 டிரில்லியன் டொலர் இலக்கு – எலோன் மஸ்க்கை வரலாறு காணாத டிரில்லியனராக மாற்றும் டெஸ்லா!
டெஸ்லா (Tesla) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஊதியத்தை கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டொலருக்கு உயர்த்த டெஸ்லா பங்குதாரர்கள் இணங்கியுள்ளனர்.
இதன் மூலம், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறுவதற்கான பாதையில் உறுதியாக அடியெடுத்து வைத்துள்ளார்.
அதற்கமைய, அடுத்த 10 ஆண்டுகளில் அவர் அந்த ஊதியத்தை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரலாற்றில் மிக அதிக ஊதியம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருப்பார் என குறிப்பிடப்படுகின்றது.
உடன்பாட்டிற்கமைய, அவருக்கு சுமார் 900 பில்லியன் டொலர் வழங்கப்படும். டெஸ்லா பங்குதாரர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதை ஆதரித்தனர்.
டெஸ்லா நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 1.1 டிரில்லியன் டொலராகும். அதை 8.5 டிரில்லியன் டொலருக்கு உயர்த்தினால் அந்த ஊதியம் வழங்கப்படும். இந்த இலக்கை அடைந்தால், மஸ்க் இந்த ஊதியத் தொகுப்பை முழுமையாகப் பெறுவார்.
வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில், 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் இந்த ஊதியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மஸ்க் இந்த தொகையை சம்பாதிக்க, நிறுவனத்தின் நிதி இலக்குகளுடன் சேர்த்து, உற்பத்தி இலக்குகளையும் அடைய வேண்டும்.
இந்த திட்டத்திற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் மகிழ்ச்சியில் நடனமாடிய மஸ்க், இது டெஸ்லாவிற்கு ஒரு புதிய அத்தியாயம் மட்டுமல்ல, இது ஒரு புதிய புத்தகம் என கூறியுள்ளார்.
அந்த இலக்கை அவர் அடைந்தால் Meta, Microsoft, Alphabet ஆகிய 3 நிறுவனங்களின் கூட்டு மதிப்பைவிட Tesla நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.





