அமெரிக்காவை அடுத்து சீனாவில் 1.6 மில்லியன் கார்களை மீட்டுக்கொள்ளும் Tesla
சீனாவில் இருந்து 1.6 மில்லியனுக்கும் அதிகமான Tesla கார்களை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tesla நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த மின்சாரக் கார்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டிருப்பதாக AFP செய்தி கூறுகிறது.
குறிப்பாக வாகனம் ஓட்டும் முறையிலும் கதவை மூடும் முறையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீட்டுக்கொள்ளப்படும் கார்களில், 2022 அக்டோபர் 26ஆம் திகதிக்கும் 2023 நவம்பர் 16ஆம் திகதிக்கும் இடையில் தயாரிக்கப்பட்ட 7,538 கார்களும் அடங்கும் என்று Tesla தெரிவித்தது.
கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் Tesla பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமான கார்களை மீட்டுக்கொண்டது.
அமெரிக்க நிறுவனமான Teslaவின் மிகப் பெரிய பயனீட்டாளர் சந்தையாகச் சீனா திகழ்கிறது. ஷங்ஹாயில் (Shanghai) அதன் முக்கிய தயாரிப்புத் தொழிற்சாலை இருக்கிறது.