மலிவு விலை மின்சார கார் உற்பத்தி – டெஸ்லா நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை

நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில் மலிவு விலை மின்சார கார்கள் உற்பத்தியை டெஸ்லா நிறுவனம் ஜூன் மாதம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அந்தவகையில், பிற நிறுவனங்களின் போட்டி, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் உள்ள மோதல் ஆகியவை டெஸ்லா மின்சார கார்கள் விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சூழலில், நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில், டெஸ்லா மலிவு விலை மின்சார கார்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்ததாக எலான் மஸ்கின் பரிந்துரையின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில், டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் 22.5 பில்லியன் டாலருக்கு குறைந்துள்ளதுடன், அதிகமாக விற்பனை ஆன Y SUV மாடலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பும் வெளியிடப்பட்டு இருந்தபோதிலும், இதன் விளைவாக, டெஸ்லா வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.