இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் போராகவே கருதப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையின் முடிவில், இனிமேல் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வருங்காலத்தில் தீவிரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





