இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் – இருவர் உயிரிழப்பு!
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி கிழக்கு நகரமான பெய்ட் ஷீனில் (Beit Shean) பாதசாரி மீது மோதியதாகவும், பின்னர் மேற்கே சுமார் 8 மைல் (12.5 கிமீ) தொலைவில் உள்ள ஐன் ஹரோட் ( Ein Harod) பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் அவசர சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேகநபர் கபாடியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், அவர் பொதுமக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் “பல நாட்களுக்கு முன்பு இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவியதாக தெரிவிக்கப்படுகிறது.





