ஸ்பெயின் விமான நிலையத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம் – 18 பேர் காயம்!

ஸ்பெயினின் மஜோர்காவின் பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் ரியானேர் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை அதிகாலை 12:35 மணியளவில் விமானம் புறப்படத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தின் இலக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பயணிகள் அவசரகால வெளியேற்றம் வழியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
. பிராந்திய அவசர ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமான நிலையத்தை தளமாகக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் காவல்படை உறுப்பினர்களுடன் நான்கு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
“பதினெட்டு பேர் காயமடைந்து மருத்துவ உதவி பெற்றனர், அவர்களில் ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” எனத் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.