இலங்கை கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பதற்றம் : பொலிஸார் பலர் படுகாயம்!
இலங்கை கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இன்று பிற்பகல் பெலவத்தை கல்வி அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதாவது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் பணிக்கு உடனடியாக நியமிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பனடுகிறது.





