இந்தோனேசியாவில் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதால் பதற்றம்!

இந்தோனேசியாவின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு எம்.பிகளின் சம்பளத்தை குறைக்குமாறு வலியுறத்தப்பட்டது.
இதனை வலியுறுத்தி மிகப் பெரிய அளவிலான போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், டாக்ஸி ஓடுநர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரின் வண்டியில் மோதி உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
“இந்த சூழ்நிலையில், அனைத்து குடிமக்களும் அமைதியாக இருக்கவும், நான் வழிநடத்தும் அரசாங்கத்தை நம்பவும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் வழிநடத்தும் அரசாங்கம் நமது மக்களுக்கு தன்னால் முடிந்ததைச் செய்யும். அனைத்து பொது புகார்களும் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்படும்.” என்று அர செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதியும் மக்களிடம் அமைதியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.