இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை தீவிரமடையும் அபாயம்

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இராணுவப் பதற்ற நிலை அதிகரித்துள்ளதுடன், நிலைமை மேலும் தீவரமடையலாம் என்று அஞ்சப்படுகிகிறது.
கடந்த வாரம் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பும் எல்லையில் சிறிய அளவில் தாக்குதல் நடவடிக்கையை எடுத்துவருகின்றன.
எல்லையோரம் சண்டை ஏற்பட்டால் கிராமவாசிகளும் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள் என்று அங்கு வசிப்போர் கூறினர்.
மிக அருகில இருக்கும் வீடுகளில் குடியிருப்போர் துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையே அச்சத்தில் வசிப்பதாகக் கூறினர்.
கால்நடைகளை வைத்திருப்போர் அவற்றை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்துவருவதாய்க் கூறினர்.
(Visited 1 times, 1 visits today)