செய்தி

மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட பதற்ற நிலை

மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே திங்கட்கிழமை காலை பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது.

100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அப்பகுதியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் முன் குழுவொன்று பந்தல் ஒன்றை அமைத்து வீதியை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து பொலிஸார் பந்தலை அகற்ற முற்பட்ட போது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதலுக்குள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை அடுத்த தாக்குதல் மற்றும் குழப்பம் ஏற்படுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதற்றத்த தணிக்க அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ உட்பட பல மதகுருமார்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி