சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் நோக்கி புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்

சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் நோக்கி புறப்பட்ட விர்ஜின் விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களில் கேபின் அழுத்தம் குறைந்ததால் பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்.
விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்த போது திடீரெனகேபின் அழுத்தக் குறைவால் அது 8,775 அடிக்கு திடீரென இறங்கியது.
விமானம் கீழிறங்கிய போது ஒக்ஸிஜன் முகமூடிகள் தானாகவே வெளியில் வந்தன. விமான ஊழியர்கள் பயணிகளை அமைதியாக வைத்திருக்க விரைந்து செயல்பட்டனர்.
விமானம் மேலதிக பாதிப்புகளின்றி பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இறங்கிய பிறகு பயணிகள் நிம்மதியுடன் விமான ஊழியர்களுக்கு கைதட்டியபடி நன்றி தெரிவித்தனர்.
விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விர்ஜின் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “விமானக்குழு நிலையான அவசரநிலை நடைமுறைகளைப் பின்பற்றி, குறைந்த உயரத்திற்கு பாதுகாப்பாக விமானத்தை இழைத்தனர். பயணிகள் பாதுகாப்பு எங்களுக்கான மிக முக்கிய முன்னுரிமையாகும்,” என்று தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அனைத்து பாதுகாப்பு தரநிலைகளும் முழுமையாக பரிசீலிக்கப்படுவதாகவும் விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.