இலங்கை செய்தி

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் – போராட்டக்காரர்கள், பொலிஸார் இடையே தர்க்கம்

சேவை நிரந்தரம் கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தர்க்க நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தின் போது இன்று (27) அவர்கள் நீதியின் மரணம்
எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்தனர். இந்நிலையில் அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.

அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!