இந்திய எல்லை அருகே பதற்றம்; தனது ராணுவத்தை குவித்து வரும் சீனா
இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவத்தை குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா சீனா இடையே சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் அடிக்கடி சீன ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்கள் காரணமாக அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருவதால், சீனாவுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது தரைப்படை ராணுவத்தை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சாலை, சேமிப்பு கிடங்குகள், சுரங்கங்கள், ஹெலிபேடுகள் போன்றவற்றை சீனா அமைத்து வருவதாகவும், இது சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது எனவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், இந்திய அரசுக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.