பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் பதற்றம்!

மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இரத்து மற்றும் தாமதங்களை சந்தித்த நிலையில், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
உள்ளூர் பகுதியில் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை பல பகுதிகளில் மின் துண்டிப்பிற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையிலேயே விமான நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெர்மினல் 3 இயங்கும் போது, டெர்மினல்கள் 1 மற்றும் 2 கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது மின் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 28 times, 1 visits today)