அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரின் தற்காலிக சட்ட அந்தஸ்த்து இரத்து : நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு!

கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து வந்த அரை மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரின் தற்காலிக சட்ட அந்தஸ்தை டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
முன்னாள் அதிபர் பைடனின் ஆட்சிக்காலப்பகுதியில் மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்த சுமார் 532,000 பேரின் பணி அனுமதிகள் மற்றும் நாடுகடத்தல் பாதுகாப்புகள் ஏப்ரல் 24 அன்று ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “CHNV பரோல் திட்டங்கள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ அடிப்படை இல்லாத பரோலிகள் தங்கள் பரோல் முடிவுக்கு வரும் திகதிக்கு முன்பே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் சட்டப் பாதுகாப்புகளை ரத்து செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.