15 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை
நாட்டின் 15 மாவட்டங்களில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், வட மத்திய மற்றும் வடல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்
வெப்பமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிப்புறச் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வதுடன், அதிகளவில் நீர் அருந்துமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




