பிரித்தானியாவில் 08C ஆக பதிவாகும் வெப்பநிலை : 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் வெப்பநிலை வார இறுதியில் 8C ஆக பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
UK Health Security Agency (UKHSA) இங்கிலாந்து முழுவதும் ஒரு வாரத்திற்கு முன்னதாக குளிர் காலநிலை சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி நேற்று (02.01) மதியம் 12 மணி முதல் அடுத்த புதன்கிழமை வரை ஆம்பர் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மைனஸ் 4C மற்றும் 5C வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)