பிரித்தானியாவில் -14C ஆக குறையும் வெப்பநிலை : பனிபொழிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தெற்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான புதிய வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு மாவட்டங்களை புதன்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு முதல் ஐந்து சென்டிமீட்டர் வரையிலான பனி மிகவும் பரவலாகவும், உயரமான நிலப்பரப்பில் 10 செ.மீ. வரை பொழியும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் வெப்பநிலையானது -14C தொடக்கம் 16C ஆக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
(Visited 24 times, 1 visits today)