அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகள் இடையே தொலைபேசியில் பேச்சுவார்த்தை
அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) சீன(China) ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன்(Xi Jinping) தொலைபேசி அழைப்பு மூலம் பேசியதாக வெள்ளை மாளிகை(White House) தெரிவித்துள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையே வரிகள் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக நடந்து வரும் இராஜதந்திர மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த அழைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ட்ரூத் சோஷியலில்(Truth Social) அழைப்பை உறுதிப்படுத்திய டிரம்ப், “உக்ரைன்/ரஷ்யா(Ukraine/Russia), ஃபெண்டானில்(Fentanyl), சோயாபீன்ஸ்(soybeans) மற்றும் பிற பண்ணை பொருட்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் நாங்கள் பேசினோம். எங்கள் சிறந்த விவசாயிகளுக்காக ஒரு நல்ல மற்றும் மிக முக்கியமான ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இரு தலைவர்களும் பரஸ்பர நேரடி சந்திப்புகளுக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் கடைசியாக செப்டம்பரில் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். கடந்த மாதம் தென் கொரியாவின்(South Korea) புசானில்(Busan) இருவரும் நேரில் சந்தித்தனர்.





