டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சை விட்டு வெளியேற அனுமதி

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ், பிரான்சை விட்டு தற்காலிகமாக வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செயல்படுத்துவதாகக் கூறப்படும் பல மீறல்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
தற்போது 40 வயதாகும் துரோவ், ஆகஸ்ட் 2024 இல் பாரிஸுக்கு வெளியே உள்ள லு போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவர் நிறுவிய பிரபலமான செய்தியிடல் செயலி தொடர்பான பல மீறல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டார்.
ஒரு சமூக ஊடக நிறுவனத்தின் நிறுவனர் தனது தளத்தில் உள்ள உள்ளடக்கம் தொடர்பாக கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
கைது செய்யப்பட்ட பின்னர் பல நாட்கள் விசாரணைக்குப் பிறகு, தீவிரவாத மற்றும் பயங்கரவாத உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஐந்து மில்லியன் யூரோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தார், ஆனால் இன்று துபாய்க்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.