தெலுங்கானாவில் 55 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம்!
இந்தியா – தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று (04) காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குறித்த நில அதிர்வு 5.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7:27 மணியளவில் குறித்த நில அதிர்வு 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் கடந்த 55 ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் முலுகு அருகே கோதாவரி ஆற்றுப்படுகையில் கண்டறியப்பட்டது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.





