இந்தியாவில் இரண்டு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்

இந்தியாவில் காதலித்த இரு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞன் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர், இரண்டு பெண்களைக் காதலித்து, இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்துள்ளார்.
காதலிகள் இருவரின் அனுமதியுடன் ஒரே சமயத்தில் இருவரையும் திருமணம் செய்துள்ளார். எனினும் குடும்பத்தினரும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின் மூவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்வதில் உறுதியாக இருப்பதை அறிந்து சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மணமகன் மணப்பெண்கள் இருவருடன் நிற்கும் புகைப்படத்துடன் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.
இரண்டு காதலிகளுக்கும் ஒரே மேடையில் தாலி கட்டி தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)