செய்தி தமிழ்நாடு

காதலிப்பதாக ஆசை காட்டி உல்லாசம் வாலிபர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (26). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இவரும் ஒரகடம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சுமித்ரா (24) ஆகிய இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

மேலும் அவ்வப்போது இருவரும் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர்.நாளடைவில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதகளுக்கு முன்பு பிரிந்து உள்ளனர்.

இந்த நிலையில் அசோகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதாக சுமித்ராவிற்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து சுமித்ரா ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோகன் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் அசோகனை கைது செய்து விசாரணை செய்ததில் சுமித்ராவை ஏமாற்றியது போலீசருக்கு தெரிய வந்தது.

பின்னர் அசோகன் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

(Visited 10 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி