மேற்கத்திய ஆடைகள் அணிந்ததற்காக சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்!( CCTV காட்சி)
வடக்கு இஸ்ரேல் பகுதியில் மேற்கத்திய ஆடைகள் அணிந்ததற்காக 19 வயது இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு இஸ்ரேலில், கலிலியில் உள்ள சல்லாமா கிராமத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் பெடோயின் வாழ்க்கை முறையில் இருந்து நழுவி, வாழ பயின்று வந்த 19வயது இளம்பெண் டிமா புஷ்னக் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். டிமா புஷ்னக் வழக்கமான கிராமத்து பெண்களை போல் விவசாய வேலைகளில் கவனம் செலுத்தாமல், மேற்கத்திய ஆடைகளை அணிவது, கல்வி கற்பது மற்றும் உள்ளூர் வணிகத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவான cctv காட்சிகளில், டிமா புஷ்னக்(19) அவரது வீட்டிற்கு அருகில் காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் திடீரென இடைமறித்து உள்ளார்.சூழ்நிலையை புரிந்து கொண்ட டிமா புஷ்னக் உடனடியாக காரை பின்னோக்கி ஓட்டியுள்ளார், ஆனால் பதற்றத்தில் கார் பின்புறம் இருந்த சுவரில் மோதி நின்றது.
அப்போது ஓட்டுநர் இருக்கையின் அருகே வந்த கொலையாளி டிமா புஷ்னக்-கை நோக்கி துப்பாக்கியால் முதல் குண்டை சுட்டுள்ளார், இரண்டாவது குண்டு சுடுவதற்குள், மற்றொரு காரின் முகப்பு ஒளி துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தை நோக்கி திரும்பியதால் கொலையாளி அந்த இடத்தை விட்டு தப்பியோடினான்.இதையடுத்து இக்கட்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிமா, பின் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.டிமா புஷ்னக் கிராமத்தின் பாரம்பரிய முறையை பின்பற்றாமல் மேற்கத்திய ஆடைகள் அணிந்தது மற்றும் கல்வி கற்றது போன்ற காரணங்களுக்காக அடிக்கடி கொலை மிரட்டல்களை சந்தித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில் டிமா-வின் தாயார் கார் தீயிட்டு கொளுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதை யார் செய்தது என்று பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த சம்பவத்திற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேலில் வசிக்கும் அரபு சமூகத்தில் டிமாவின் மரணம் இந்தாண்டின் 78வது சம்பவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/i/status/1657859166977794050