தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் – ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்று டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற Umagine TN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை, எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற UmagineTN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து, உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ்நாட்டின் இலக்குகள் தெளிவானது. புது யுகத்தின் தொழில்நுட்பத்திலீ தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்க வேண்டும், ஆனால், அந்த வளர்ச்சியில் யாரும் விட்டுப்போக கூடாது, அறிவானாலும், தொழில்நுட்பமானாலும் எல்லோருக்குமானதாக அது இருக்க வேண்டும்.
அப்படி ஒரு வருங்காலத்தைதான் நம்முடைய இளைய தலைமுறைக்காக திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பி வருகிறது” என்றார்.





