அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் தொழில்நுட்பம் – இனி கைகள் மாத்திரம் போதும்
கைத்தொலைபேசி ஸ்மார்ட் தொலைபேசியான நிலையில் ஸ்மார்ட் தொலைபேசி என்னவாகும் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Humane என்ற நிறுவனம் அதற்குப் பதில் வைத்திருப்பதாகக் கூறுகிறது. ஸ்மார்ட் தொலைபேசி திரையில் வரும் அனைத்தும் நேரடியாக உள்ளங்கையிலேயே வரும் வகையில் அந்த நிறுவனம் கருவியை உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரலாலும் கை செய்கைகளாலும் அந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். கேட்டால் போதும்… அனைத்துத் தகவல்களையும் உள்ளங்கையில் காட்டிவிடும்.
நேரடியாக மொழிபெயர்ப்பும் செய்து அதை நமது குரலிலேயே பேசியும் காட்ட முடியும். அந்தச் சிறிய கருவியை அணிந்திருக்கும் ஆடையில் பொருத்திக்கொள்ளலாம்.
Humane நிறுவனத்தின் நிறுவனர்கள் அதை அண்மையில் TED talk என்கிற கருத்தரங்கில் அறிமுகம் செய்தனர்.
அந்தக் கருவி இன்னும் தயாரிப்பு நிலையில் தான் உள்ளது.
எனினும் அது புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.