பெங்களூருவில் மனைவியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தொழில்நுட்ப வல்லுநர்

பெங்களூருவைச் சேர்ந்த 36 வயது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்து, அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து புனேவுக்குத் தப்பிச் சென்று, பின்னர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் 32 வயதான கௌரி அனில் சம்பேகர் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த தம்பதியினர் கடந்த ஒரு வருடமாக பெங்களூரில் வசித்து வந்தனர்.
புதன்கிழமை இரவு இருவரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் தொடங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கௌரியின் உடல் அவர்களின் வீட்டில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது இந்த கொடூரமான குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆரம்ப தடயவியல் பகுப்பாய்வின்படி, பாதிக்கப்பட்டவரின் கழுத்து மற்றும் வயிற்றில் பல முறை குத்தப்பட்டு, பின்னர் அவரது உடல் எட்டு முதல் பத்து துண்டுகளாக வெட்டப்பட்டு பின்னர் மறைக்கப்பட்டது.