லண்டன் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!
லண்டன் ஹீத்ரோவுக்குச்(London Heathrow) சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் (BA1443) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எடின்பர்க் (Edinburgh) விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேற்படி விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் A320 விமானத்தில் இருந்த விமானிகள் 7700 என்ற அவசர சப்தக் குறியீட்டை வெளியிட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு சமிக்ஞை செய்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் எடின்பர்க் விமான நிலையத்தின் செயற்பாடுகளை 40 நிமிடம் நிறுத்திவைத்துவிட்டு குறித்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், விமான நிலைய செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





