ஆசியா செய்தி

வங்கதேசம் செல்லும் இந்தியாவின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உத்தரா பகுதியில் பள்ளி மீது ராணுவத்தின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது.

இதில் 31 பேர் பலியானார்கள். 170க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.

தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு விரைவில் டாக்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது.

நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள்.

அவர்களின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி