வரி விதிப்பு – UKவில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!
பிரித்தானியாவில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு Vat வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன பாடசாலைகள் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஜூலி ராபின்சன் (Julie Robinson), இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 105 தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த செயற்திட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வரும் காலங்களிலும் பல பாடசாலைகள் மூடப்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. குறிப்பாக லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சில பாடசாலைகள் தங்களின் கல்வி நிறுவனத்தை வேறு நிறுவனங்களுடன் இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“தனியார் பள்ளிகளுக்கான வரிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, 2029/30 ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு £1.8 பில்லியன்களை திரட்ட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இது குழந்தைகள் எல்லா இடங்களிலும் சிறந்து விளங்குவதை உறுதிசெய்யவும், அரச பாடசாலைகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு வாய்ப்பு வழங்கவும், பொது சேவைகளுக்கு நிதியளிக்கவும் உதவும் என அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.





