பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா எடுத்துள்ள முயற்சி : HIV பரவல் குறித்து கவலை!
சீனாவில் கருத்தடை சாதனங்களுக்கு வரி விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இதற்கமைய சீன மக்கள் கருத்தடை சாதனங்களுக்கு 13% விற்பனை வரியை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக காணப்படும் சீனா, பிறப்பு விகிதத்தில் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.
சீனாவின் மக்கள் தொகை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகக் குறைந்துவிட்டதாகவும், 2024 இல் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சமூக நலக் கொடுப்பனவுகளையும் சீனா அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
இருப்பினும் ஆணுறைகள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மீதான வரி, தேவையற்ற கர்ப்பம் மற்றும் எச்.ஐ.வி விகிதங்கள் குறித்த கவலையைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





