ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வரி மாற்றம் : சுயதொழில் செய்யும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் 2026 ஆம் ஆண்டு முதல் வரி மாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய சுங்கத் துறை (HMRC) தொழிலாளர்களுக்கான அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி சுயத் தொழில் செய்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆண்டிற்கு £50,000 க்கு மேல் சம்பாதித்தால்  வரி மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களின் கீழ் அவர்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஆன்லைன் (online) புதுப்பிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் HMRC எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், வருமான வரிக்கான (Making Tax Digital) மேக்கிங் டேக்ஸ் டிஜிட்டல் (MTD) என்று அழைக்கப்படும் இந்தப் புதிய அமைப்பு ஏப்ரல் 6 ஆம் திகதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஏப்ரல் 2026 முதல், சுயதொழில் செய்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் ஆண்டிற்கு £50,000 க்கு மேல் வருவாய் பெற்றால் HMRC அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி காலாண்டு புதுப்பிப்புகளை சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் டிஜிட்டல் பதிவுகளை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின் வருமானத்தை எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்பதோடு, நேரத்தை சேமிக்க முடியும் எனவும்  விவரிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி