தாயின் மறைவுக்குப் பிறகு வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான்
முன்னாள் வங்காளதேசப்(Bangladesh) பிரதமரின் மறைவுக்கு சில நாட்களுக்குப் பிறகு வங்காளதேச தேசியவாதக் கட்சியின்(BNP) தலைவராக தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) முறைப்படி பதவியேற்றுள்ளார்.
“வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) மறைவைத் தொடர்ந்து தலைவர் பதவி காலியாகிவிட்டதால் கட்சியின் தலைவராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ளார்” என்று Xல் ஒரு பதிவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்காவில்(Dhaka) உள்ள எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலீதா ஜியா தனது 80 வயதில் டிசம்பர் 30 அன்று காலமானார்.





